சல்மான் கான் ஜோடியாகும் த்ரிஷா!

http://thatstamil.oneindia.in/img/2010/08/09-trisha-4-200.jpg

பாலிவுட்டில் தனது முதல் படமான கட்டா மீட்டா தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்து இந்தியில் வாய்ப்பு வருகிறதாம் த்ரிஷாவுக்கு.

அடுத்து சல்மான் கான் ஜோடியாக இந்திப் படம் ஒன்றில் நடிக்கிறாராம் த்ரிஷா. இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்ததும், நிரந்தரமாக மும்பையிலேயே தங்கிவிடும் ஐடியாவில் உள்ளாராம்.

த்ரிஷாவின் இந்த வேகம் அசினுக்கு கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது. கஜினி வெற்றி, லண்டன் ட்ரீம்ஸ் தோல்விக்குப் பிறகு, நீண்ட நாட்கள் படங்களின்றி காத்திருந்தார் அசின். அவருக்கும் சல்மான்கான்தான் கைகொடுத்தார். இலங்கையில் சல்மான்கானுடன் ரெடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்போது முதல் படத்திலேயே தோற்றுப் போன த்ரிஷாவுக்கும் கைகொடுத்துள்ளார் சல்மான்கான்.

கவுதம் மேனன் இயக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கிலும் த்ரிஷாதான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent