விஷன் எக்ஸ் மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம், 'நந்தி'. அகில், சனுஷா ஜோடி. ரத்தீஷ் ஒளிப்பதிவு. பரத்வாஜ் இசை. முத...
விஷன் எக்ஸ் மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம், 'நந்தி'. அகில், சனுஷா ஜோடி. ரத்தீஷ் ஒளிப்பதிவு. பரத்வாஜ் இசை. முத்து விஜயன் பாடல்கள். தமிழ்வாணன் இயக்குகிறார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. தமிழகம் மற்றும் மலேசியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'நாக்கமுக்க' சின்னப்பொண்ணு பாடிய, 'சங்குசக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு' பாடல் காட்சியை, மீனம்பாக்கம் கவுல் பஜாரில் படமாக்கினோம். தாரா நடனப்பயிற்சி அளித்தார். அகில், சிங்கம்புலி, 'சுப்ரமணியபுரம்' மோகன் இணைந்து ஆடினர். அவர்களுடன் மலேசியாவை சேர்ந்த நோரா, தனுஷியா ஆடினார்கள்.
இதற்காக மலேசியாவில் நேர்முகத்தேர்வு நடத்தி, பிரபல மாடல் நோரா, மலேசியா நடிகை தனுஷியாவை தேர்வு செய்தோம். தமிழ் படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதால், மலேசியாவில் 'நந்தி' படத்தின் பிரீமியர் ஷோ நடத்த உள்ளோம். எனவே, மலேசிய ரசிகர்களை கவுரவப்படுத்தும் விதத்தில், அங்குள்ள நடிகைகளை நடிக்க வைத்துள்ளோம். ஷூட்டிங் முடிந்து விட்டது. செப்டம்பரில் படம் ரிலீஸ் ஆகிறது.
இவ்வாறு தமிழ்வாணன் கூறினார். தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக், நோரா, தனுஷியா உடனிருந்தனர்.
Comments
Post a Comment