கடந்த இரு ஆண்டுகளாக எஸ்.ஜே. சூர்யா இயக்கி வந்த படம் புலி. இதில் பவன் கல்யாண், புதுமுகம் நிகிஷா ஜோடி. ஒரு பாடலுக்கு ஸ்ரேயா ஆடியுள்ளார். பட...
கடந்த இரு ஆண்டுகளாக எஸ்.ஜே. சூர்யா இயக்கி வந்த படம் புலி. இதில் பவன் கல்யாண், புதுமுகம் நிகிஷா ஜோடி. ஒரு பாடலுக்கு ஸ்ரேயா ஆடியுள்ளார். படம் முடியும் தருவாயில் புலியுடன் கொமரம் என்ற தலைப்பை சேர்த்து வைத்தனர். இதனால் கொமரம் புலி என பட தலைப்பு மாறியது. இப்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்நிலையில் கொமரம் பெயருக்கு ஆந்திராவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொமரம் பீம் என்பவர் தெலுங்கானா போராட்டத்தில் முக்கியமானவராக உள்ளார். அவரது பெயரை படத்தில் பயன்படுத்தி இருப்பதால்தான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைப்பிலிருந்து கொமரம் பெயரை நீக்குமாறு ஒரு தரப்பினர் கேட்டுள்ளனர்.
இல்லையென்றால் வழக்கு தொடருவோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு ஆண்டுகள் ஒரே படத்தில் பணியாற்றி இருப்பதால் இதில் எந்த பிரச்னையும் வேண்டாம் என விரும்புகிறாராம் எஸ்.ஜே. சூர்யா. இதனால் தலைப்பிலிருந்து கொமரம் வார்த்தையை நீக்கிவிடலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இதை பட ஹீரோ பவன் கல்யாண் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொமரம் பீம் பற்றி தெலுங்கில் ஒரு படம் வெளியாகியுள்ளது. படத்தில் யாரையும் விமர்சிக்கவில்லை. அதனால் தலைப்பை மாற்ற அவசியமும் இல்லை என பவன் கல்யாணுக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.
Comments
Post a Comment