விளம்பர படங்களில் படு பிஸி :நடிகைகள் காட்டில் கரன்சி மழை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பட்டு சேலை, பனியன்-ஜட்டி, வலி நிவாரணி மாத்திரை, வயாக்ரா மாத்திரை என எது விற்பதற்கும் விளம்பரம் தேவைப்படுகிறது. டிவியிலோ, பத்திரிகையிலோ விளம்பரம் வந்தால் உடனே கடையில் ஆஜராகி விசாரிக்க ஆரம்பித்துவிடுகின்றனர் மக்கள். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் வசப்படுத்தும் திறமை விளம்பரத்துக்கு உண்டு. இதனால், நிறுவனங்கள் போட்டி போட்டு விளம்பரங்களை உருவாக்குகின்றன.
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான், ஆமிர்கான், விஜய், விக்ரம், மாதவன் என குறிப்பிட்ட சில நடிகர்கள், சச்சின், டோனி போன்ற சில விளையாட்டு வீரர்களை விளம்பரங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

ஆனாலும், விளம்பர படங்களை பொருத்தவரை ஹீரோக்களைவிட ஹீரோயின்களுக்கு அதிக மவுசு. ஐஸ்வர்யாராயில் தொடங்கி, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப், கரீனா கபூர், ஸ்ரீதேவி, ப்ரீத்தி ஜிந்தா, குஷ்பு, தமன்னா, அனுஷ்கா, சினேகா, அசின், ஸ்ரேயா, ரம்யா, மீரா ஜாஸ்மின், ஜெனிலியா, இலியானா, தேவயானி, பத்மப்ரியா என பட்டியல் பெரிதாக நீள்கிறது. மாடல் அழகிகள், மாஜி விளையாட்டு வீராங்கனைகள், பாடகிகள் என பட்டியல் நீள்கிறது. பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடியும் விளம்பரத்தில் வந்துவிட்டார்.

இதுபற்றி நடிகை குஷ்புவிடம் கேட்டபோது, 'விளம்பரத்தில் ஆண், பெண் ஆதிக்கம் என்று பிரித்துக் கூற விரும்பவில்லை. புதிதாக சந்தைக்கு வரும் பொருளின் விளம்பர தூதராக பெரும்பாலும் நடிகைகளையே நிறுவனங்கள் அறிவிக்கின்றன' என்றார். பீக் நடிகை என்றால் ரூ.2 கோடி வரை போகிறது சம்பளம். அதிகபட்சம் 4 நாட்களில் ஷூட்டிங் முடிந்துவிடும் என்பதால் விளம்பர ஒப்பந்தங்களுக்கு நடிகைகள் நோ சொல்வதே இல்லை. சினிமாவைவிட விளம்பர படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். விளம்பர படங்களில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் நடிகைகள் காட்டில் கரன்சி மழை கொட்டுகிறது.

Comments

Most Recent