எந்திரனின் இந்திப் பாடல் வெளியீடு :ஒரே மேடையில் ர‌ஜினி,அமிதாப்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் இயக்கியுள்ள இந்திய சினிமாவின் மிகப் பிரமாண்ட படைப்பான ‘எந்திரன்’ பாடல்கள் வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரமாண்ட ‘எந்திரன்’, அடுத்த மாதம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

எந்திரனின் இந்திப் பதிப்பு நேரடி இந்திப் படங்களுக்கு இணையான பிரமாண்டத்துடன் வெளியாக உள்ளது. முதல்கட்டமாக இன்று எந்திரனின் இந்திப் பாடல்களை வெளியிடுகின்றனர். இந்த விழாவில் ர‌ஜினி, ஷங்கர், கலாநிதி மாறன், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப்பச்சனும், ஷாருக்கானும் கலந்து கொள்கிறார்கள். ஷங்கர் எந்திரன் கதையை ஷாருக்கானிடம் சொன்னதும், அவர் கடைசி நிமிடத்தில் எந்திரனில் நடிக்காமல் பின் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. உடல்நலக்குறைவு காரணமாக அமீர்கான் விழாவில் கலந்து கொள்ள இயலாது என தெ‌ரிவித்துள்ளார்.

Comments

Most Recent