மாநில அரசியலுக்கு திரும்புகிறார் எந்த கட்சியில் சேருவது?ஊசலாட்டத்தில் ஜெயப்பிரதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'நினைத்தாலே இனிக்கும்' பட ஹீரோயின் ஜெயப்பிரதா 1980களில் தெலுங்கு படங்களில் கொடி கட்டி பறந்தார். பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து மகளிர் அணி தலைவி ஆனதுடன், ராஜ்யசபா எம்.பி. ஆனார். பின்னர் சமாஜ்வாடி கட்சிக்கு தாவி தேசிய அரசியலுக்கு சென்றார். அக்கட்சியில் அமர்சிங் கோஷ்டியில் இருந்த அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மோதலில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதிரடியாக வேறு கட்சியில் சேராமல் அமைதி காத்து வரும் ஜெயப்பிரதா தேசிய அரசியலைவிட்டு மாநில அரசியலுக்கு திரும்ப முடிவு செய்திருக்கிறார். நேற்று ஆந்திர முதல்வர் ரோசய்யாவை திடீரென சந்தித்தார். 'காங்கிரஸில் சேரப் போகிறீர்களா?' என்று ஜெயப்பிரதாவிடம் கேட்டதற்கு, "ஆந்திர முதல்வர் ஆன பிறகு ரோசய்யாவை சந்திக்கவில்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்" என்றார். இதற்கிடையில் தாய்க் கட்சியான தெலுங்கு தேச கட்சியின் முன்னணி தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். எந்தக் கட்சியில் சேருவது என்று முடிவெடுக்க முடியாமல் ஊசலாட்டத்தில் இருக்கும் ஜெயப்பிரதாவை காங்கிரஸில் சேரும்படி அமர்சிங் கூறியிருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் மேலிடத்தில் அமர்சிங்குக்கு நெருக்கம் அதிகம் இருப்பதால் அக் கட்சியில் ஜெயப்பிரதாவை சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்வார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Comments

Most Recent