மலையாள நடிகர் சங்கத்துக்கு எதிராக செயல்படுகிறார் என திலகன் மீது புகார். இதனால் மலையாள படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
மலையாள நடிகர் சங்கத்துக்கு எதிராக செயல்படுகிறார் என திலகன் மீது புகார். இதனால் மலையாள படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் நடித்து வந்த ஓரிரு படங்களிலிருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களை கடுமையாக விமர்சித்தார் த¤லகன். படங்களில் நடிக்க முடியாததால் இப்போது மேடை நாடகங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மலையாள முன்னணி நடிகரான சுரேஷ் கோபி, திலகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். திலகனை பற்றி சுரேஷ் கோபி கூறும்போது, Ôதிலகன் வயதில் மூத்தவர். அனுபவம் வாய்ந்தவர். திரையுலகிலும் அவரது பங்களிப்பு பெரியது. அப்படிப்பட்ட நடிகருக்கு தடை விதித்து இருப்பது வருத்தம் அளிக்கிறதுÕ என்றார். சுரேஷ் கோபியின் இந்த கருத்தால் மலையாள நடிகர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம். Ôசங்க விதிமுறையை மீறியவருக்கு சுரேஷ் ஆதரவளிப்பது துரதிஷ்டவசமானது. சுரேஷ் மீது என்ன நடவடிக்கை என்பது விரைவில் முடிவு எடுக்கப்படும்Õ என மலையாள நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment