விருத்தாச்சலத்தில் நடந்த விருத்தகிரி படத்தின் ஷூட்டிங்கில் மன்னர் வேடத்தில் விஜயகாந்து கலந்து கொண்டு நடித்தார். இதை நூற்றுக்கணக்கான மக்கள்...
விருத்தாச்சலத்தில் நடந்த விருத்தகிரி படத்தின் ஷூட்டிங்கில் மன்னர் வேடத்தில் விஜயகாந்து கலந்து கொண்டு நடித்தார். இதை நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து ரசித்தனர்.
விருத்தகிரி என்ற படத்தை விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தை விஜயகாந்த்தே இயக்கி நடிக்கிறார். படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறாராம் விஜயகாந்த்.
விஜயகாந்த்துக்கு ஜோடியாக புதுமுக நடிகை மாதுரி தீபக் என்பவர் ஜோடியாக நடிக்கிறார்.
பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை முடித்த நிலையில் சொந்த தொகுதியான விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் படப்பிடிப்பை வைக்க வேண்டும் என தொகுதியிலிருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து அங்கு படப்பிடிப்பை மாற்றினார் விஜயகாந்த்.
அங்குள்ள புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு விருத்தகிரி படப்பிடிப்பு நடந்தது. இதில், விஜயகாந்த் மன்னர் கெட்டப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
இதை விஜயகாந்த் ரசிகர்களும், தொகுதி மக்களும் திரண்டு வந்து பார்த்து ரசித்னர். தங்களது தொகுதி எம்.எல்.ஏவான விஜயகாந்த் நடிப்பதைப் பார்க்கும் ஆவலில் பெரும் கூட்டம் கூடியதால், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Comments
Post a Comment