மோகன்லால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் ‘கேசனோவா’. இதில் இன்னொரு ஹீரோயினாக ஸ்ரேயா...
மோகன்லால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் ‘கேசனோவா’. இதில் இன்னொரு ஹீரோயினாக ஸ்ரேயா நடிக்க ஒப்பந்தமானார். திடீரென அவர் படத்திலிருந்து வ¤லகியுள்ளார். தீபா மேத்தாவின் Ôமிட்நைட் சில்ரன்ஸ்’ படத்தில் நடிக்கவே இதிலிருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்ரேயா கூறியது: ‘கேசனோவா’ படத்தில் நிறைய நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். பெரிய படம். இதனால் ஒப்புக்கொண்டேன். ஆனால் படத்தை திட்டமிட்டபடி ஆரம்பிக்கவில்லை. இந்த படத்துக்காக குறிப்பிட்ட சில நாட்களில் கால்ஷீட் ஒதுக்கியிருந்தேன். அதை படக்குழு சரியாக பயன்படுத்தவில்லை. அடுத்தடுத்து எனக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. கால்ஷீட் தேதிகள் வீணாவதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் அந்த படத்திலிருந்து விலகிவிட்டேன். தீபா மேத்தா இயக்கத்தில் ‘மிட்நைட் சில்ரன்ஸ்’ படத்தில் நடிப்பது பற்றி பேசியிருக்கிறார்கள். தமிழில் ஜீவாவுடன் ‘ரவுத்திரம்’ படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
Comments
Post a Comment