பசுமாட்டுக்கு பெயர் வைத்தது அசினை இழிவுபடுத்த அல்ல! - சுனேனா

http://thatstamil.oneindia.in/img/2010/08/10-sunaina200.jpg

பாண்டிராஜ் இயக்கத்தில் அருள் நிதி – சுனேனா நடிக்கும் ‘வம்சம்’ படத்தில் ஒரு பசு மாட்டுக்கு அசின் என பெயர் வைத்துள்ளனர்.
இது அசினை இழிவுபடுத்துவதற்காக வைக்கப்படவில்லை என்று படத்தின் நாயகி சுனேனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “படத்தில் அழகான பசு மாடு முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. அதற்கு அசின் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனக்கும் கதாநாயகனுக்கும் காதல் தூதாக அந்த மாடுதான் போகிறது. கதாநாயகன்தான் அந்த பசு மாட்டை எனக்கு விற்பார். அதற்கு நான் அசின் என பெயர் வைப்பேன்.
கிராமங்களில் தங்கள் வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சினிமா நடிகைகள் – நடிகர்களின் பெயர்களைத்தான் இப்போதும் வைக்கிறார்கள். அதற்காக நடிகர் நடிகைகளை அவர்கள் இழிவுபடுத்துவதாகச் சொல்ல முடியுமா?
நான் மட்டுமின்றி படப்பிடிப்பு குழுவினர் எல்லோருக்குமே அசின் பசு மேல் பிரியம் அதிகம். எனக்கு மிருகங்களை பிடிக்கும். அசின் மீதும் மிகுந்த அன்பு காட்டினேன். நடிகை அசினை நாங்கள் எதற்காக அசிங்கப்படுத்தப் போகிறோம்”, என்றார்.

Comments

Most Recent