ராம் கோபால் வர்மாவுக்கு கொலை மிரட்டல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


‘ரத்த சரித்திரம்’ படத்தை இயக்கி முடித்துவிட்டார் ராம் கோபால் வர்மா. தமிழ் தவிர இந்தி மற்றும் தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகிறது. சூர்யா, விவேக் ஓபராய் நடித்துள்ளனர். ஆந்திராவை கலக்கிய தாதா பரிதாலா ரவி பற்றிய படம் இது. ரவி கேரக்டரில் விவேக் ஓபராய் நடிக்கிறார். அடுத்த மாதம் படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் போனில் வர்மாவுக்கு கொலை மிரட்டல் வந்த¤ருக்கிறது. இது பற்றி ராம் கோபால் வர்மா கூறும்போது, ‘போனில் பேசியவன் பரிதாலா ரவியுடன் இருந்தவன். ‘எங்களை பற்றி தப்பா படம் எடுக்கிறியா. உன்னை கொன்னுடுவோம்Õ என மிரட்டல் விடுத்தான். நான் பயப்படவில்லை. ‘உன்னால முடிஞ்சதை பண்ணிக்கோ’ என்றேன். இந்த படத்தால் இது போல் பிரச்னைகள் வரும் என தெரியும். அது பற்றி துளியும் கவலைப்படவில்லை’ என்றார்.

Comments

Most Recent