ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரிக்கும் படம், 'கருங்காலி'. மு.களஞ்சியம் இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார்.நிருபர்களி...
ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரிக்கும் படம், 'கருங்காலி'. மு.களஞ்சியம் இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:'பூமணி'யில் என்னை இயக்குனராக அறிமுகம் செய்தவர், விவேகானந்தன். அவர் தயாரிக்கும் 'கருங்காலி'யில் ஹீரோவாக அறிமுகமாகிறேன். கணவன், மனைவி தங்கள் அன்பையும், பாசத்தையும், காதலையும் சரியான சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்த தவறும்போது, அவர்களது வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. இதை தன் சுயலாபத்துக்கு பயன்படுத்தி, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, மூன்றாவது நபராக அவர்கள் வாழ்க்கையில் நுழைந்து குழப்பம் ஏற்படுத்துகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி தப்பிப்பது? அதன் முடிவு என்ன என்பதே இப்படத்தின் கதை.சென்னை கூவத்தில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் மற்றும் மேல்தட்டு, கிராமத்து மக்களின் சொல்லாத வாழ்க்கையை சொல்கிறேன். கருங்காலி வேடத்தில் நான், மேல்தட்டு இளைஞனாக ஸ்ரீனிவாஸ், அப்பாவி கிராமத்து பெண்ணாக அஞ்சலி, டாக்டராக சுனிதா வர்மா, குப்பத்து பெண்ணாக அஸ்மிதா, மிலிட்டரி கர்னலாக அலெக்ஸ் நடிக்கிறோம். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விரைவில் படம் ரிலீஸாகிறது.
Comments
Post a Comment