'கொமரம் புலி'-காத்திருக்கும் கோலிவுட்!

http://searchandhra.com/english/wp-content/uploads/2010/07/Komaram-Puli-Movie-Poster-Designs-1.jpg

தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நம்ம ஊர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள கொமரம் புலி. இதே எதிர்பார்ப்பு கோலிவுட்டிலும் பெருகியுள்ளது. படத்தின் ரீமேக் உரிமயை வாங்க கடும் போட்டியும் ஏற்பட்டுள்ளதாம்.

உண்மையில் இந்த கொமரம் புலி தமிழில் உருவாகியிருக்க வேண்டிய படம். ஆனால் தடம் மாறி தெலுங்குக்குப் போய் விட்டது. அது ஒரு கதை. விஜய்யை வைத்து இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தார் சூர்யா. குஷி படத்தைத் தொடர்ந்து இந்தக் கதையை உருவாக்கியிருந்தார். இந்தக் கதை தொடர்பான விவாதத்தில் சிம்புவையும் அவர் ஈடுபடுத்தவே அப்செட் ஆன விஜய் நடிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் எஸ்.ஜே.சூர்யா கடுப்பாகி படத்தையே டிராப் செய்து விட்டார். ஆனால் தமிழில்தான் இந்த முடிவு. இதே கதையை தெலுங்கில் வைத்து இயக்க முடிவு செய்த அவர் பவன் கல்யாணை அணுகவே, கதையில் இம்ப்ரஸ் ஆன பவன் கல்யாண் நடிக்க ஒப்புக் கொண்டார்.

தமிழில் புலி என பெயரிட்ட இந்தக் கதையைத்தான் தெலுங்கில் கொமரம் புலியாக மாற்றி எடுத்துள்ளார் சூர்யா. இப்படம் தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாம். அந்த அளவுக்கு படம் அட்டகாசமாக வந்துள்ளதாம்.

இதைக் கேள்விப்பட்ட தமிழ் சினிமாக்காரர்கள் பலரும், ரீமேக் உரிமையை வாங்க அலை மோத ஆரம்பித்துள்ளனராம். என்ன காமெடி என்றால் விஜய்யும் கூட இப்படத்தை ரீமேக் செய்ய ஆர்வமாக உள்ளாராம். ஒரிஜினல் கதையில் நடித்திருக்க வேண்டிய விஜய் இப்போது ரீமேக் படத்திற்காக ஆர்வம் காட்டுவது வேடிக்கைதான்.

இந்தியில் இப்படத்தை ரீமேக் செய்ய சல்மான் கான் ஆர்வம் காட்டுகிறாராம். இதுகுறித்து படத் தயாரிப்பாளர்களிடம் பேசியுள்ளாராம்.

இப்படி ஒருபக்கம் பிசினஸ் படு சூடாக காணப்படுகிற வேளையில், படத்தின் பாடல்கள் தெலுங்கில் ஹிட் ஆகியுள்ளன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல படத்தின் நாயகி நிகேஷா பட்டேலுக்கும் செம கிராக்கியாகியுள்ளதாம். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலிலும் கூட இவரைத் தேடி நிறைய வாய்ப்புகள் வருகின்றனவாம்.

ஆகஸ்ட் 2வாவது வரம் கூண்டை விட்டு திரைக்கு வரும் கொமரம் புலி எந்த அளவுக்கு தெலுங்கு சினிமாவில் ஹிட் ஆகப் போகிறது என்பதற்காக தமிழ்த் திரையுலகினர்தான் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனராம்.

Comments

Most Recent