முருகதாஸ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக தமிழ...
முருகதாஸ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக தமிழில் நடிக்கிறார்.
இந்தப் படம் முற்றிலும் புதிய கதை என்று கூறப்பட்டாலும், கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஸனின் தழுவல் என்று தெரிய வந்துள்ளது. இதே இயக்குநரின் மொமெண்டோவைத்தான் கஜினியாக எடுத்து வெற்றி கண்டது சூர்யா- முருகதாஸ் கூட்டணி.
இந் நிலையில், படத்தில் சூர்யாவின் பாத்திரம் என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது. கதைப்படி சர்க்கஸ் கம்பெனியில் பணியாற்றும் சாகஸக் கலைஞராக நடிக்கிறாராம் சூர்யா. இதற்காக கோவையில் இப்போது நடக்கும் கிரேட் பாம்பே சர்க்கஸ் கூடாரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழில் காணாத அசத்தல் சாகஸங்களை இந்தப் படத்தில் செய்யவிருக்கிறாராம் சூர்யா.
Comments
Post a Comment