கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் படம், 'வந்தான் வென்றான்'. ஜீவா, டாப்ஸி, சந்தானம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ஜி.முத்தையா. இசை, எஸ்....
கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் படம், 'வந்தான் வென்றான்'. ஜீவா, டாப்ஸி, சந்தானம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ஜி.முத்தையா. இசை, எஸ்.தமன். வசனம், பட்டுக்கோட்டை பிரபாகர். கதை, திரைக்கதை எழுதி ஆர்.கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா, ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. மணிரத்னம் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, ராம.நாராயணன், வி.சி.குகநாதன், ஆர்.பி.சவுத்ரி, சிவசக்தி பாண்டியன், பிரமிட் நடராஜன், எடிட்டர் மோகன், டி.சிவா, அன்பாலயா பிரபாகரன், சுந்தர்.சி, சமுத்திரக்கனி, கே.முரளிதரன், சுவாமிநாதன், அபிராமி ராமநாதன், காட்ரகட்ட பிரசாத், ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டனர். பிறகு ஜீவா, நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு படத்தை முடித்து விட்டுதான், அடுத்த படத்தில் நடிப்பேன். இப்போது 'சிங்கம் புலி', 'கோ', 'ரவுத்திரம்', 'வந்தான் வென்றான்' என, ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்கிறேன். எல்லாமே சிறப்பான கதை என்பதால், ஒப்புக்கொண்டேன். 'கோ' ஷூட்டிங்கிற்காக விரைவில் நார்வே செல்கிறேன். இரவு நேரங்களில் சென்னையில் நடக்கும் 'ரவுத்திரம்' ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன். இதற்கு பிறகு 'வந்தான் வென்றான்'. அதிக படங்களில் நடித்தாலும், ஒவ்வொரு கேரக்டருக்கும் வித்தியாசம் இருக்கும்.
Comments
Post a Comment