பேட்மிண்டன் போட்டியில் ஷாலினி தோல்வி

http://thatstamil.oneindia.in/img/2010/08/09-shalini200.jpg

சென்னை மாவட்ட பேட்மிண்டன் போட்டியில் நடிகை ஷாலினி தோல்வியுற்றார்.

நடிகர் அஜீத்துக்கு எப்படி ரேஸ் என்றால் உயிரோ, அதேபோல அவருடைய மனைவி ஷாலினிக்கு பேட்மிண்டால் என்றால் கொள்ளைப் பிரியும். பேட்மிண்டன் வீராங்கனையான ஷாலினி திடீரென சென்னை மாவட்ட பேட்மிண்டன் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டார்.

அவரும், ஏ. பிரியா என்ற வீராங்கனையும் இணைந்து ஆடிய ஆட்டம் நேற்று நடந்தது. இந்தப் போட்டியை அஜீத் நேரில் வந்து பார்த்து ரசித்து, கை தட்டி மனைவியை உற்சாகப்படுத்தினார்.

இந்தப் போட்டியில் ஷாலினி-பிரியா ஜோடி, 12-20, 22-20, 11-21 என்ற செட் கணக்கில் சுனேரி-காந்தி ஜோடியிடம் தோல்வியுற்றது.

தொடர்ந்து ஷாலினி பேட்மிண்டன் விளையாடுவாரா என்று அஜீத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவருக்கு எது விருப்பமோ அதை அவர் தொடர்ந்து செய்வார், நான் தடுக்க மாட்டேன் என்றார் புன்னகையுடன்.

இறுதியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

Comments

Most Recent