விஜய் விழாவை துவக்கி வைத்த நமீதா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv56DA-BC50avMLN7J64T5hdv1ndhNy_Le1aFyzZ-8bHMrfUGQ2DrRrHGrccZaelUo76wjiKzIXxPGOPPQjnCY-lsEUdOOoeILv4EQ7CR8layqPJJCUqhnjD-zRVne5HwuldMgqQrUwaPH/s400/namita2.jpg

நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்காக எஸ்.எஸ்.மியூசிக் தொலைக்காட்சியில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்த நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு "எனிதிங் ஃபார் விஜய்" பெயரிடப்பட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் ரசிகர்களுக்காக இந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் விஜய் ரசிகர்கள் தங்களின் பெயர்களை எஸ்.எஸ்.மியூசிக் தொலைக்காட்சியில் பதிவு செய்து, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தலாம். மிமிக்ரி, நடிப்பு, டான்ஸ், பாட்டு என விஜய் மீதான பாசத்தை அல்லது நடுவர்களை கவரும் வண்ணம் தனித்திறன்களை வெளிப்படுத்தலாம். இந்த தனித்திறன் நிகழ்ச்சியை கோலிவுட் கவர்ச்சிப் புயல் நமீதா துவங்கி வைத்து, பார்வையிட்டார். மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்நிகழ்ச்சியில் மேலும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எஸ்.எஸ்.மியூசிக் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் ரசிகர்கள் நடிகர் விஜய்யை சந்தித்து, அவருடன் உணவு உண்ணும் வாய்ப்பை பெற உள்ளனர். விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ள இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஒவ்‌வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.00 மணி முதல் 10 மணி வரை எஸ்.எஸ்., மியூசிக் சேனலில் ஒளிப்பாக உள்ளது.

Comments

Most Recent