சர்வதேச பிரிவில் மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிகமான ரசிகர்களால் வாங்கப்பட்ட திர...
சர்வதேச பிரிவில் மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிகமான ரசிகர்களால் வாங்கப்பட்ட திரைப்பட பாடல்கள் என்ற பெருமையை எந்திரன் படப் பாடல்கள் பெற்றிருக்கிறது. உலக அளவில் தமிழ் திரைப்படம் ஒன்று இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆன்லைனில் டிஜிட்டல் இசை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐடியூன்ஸ் ஸ்டோரில் இதற்கு முன் எந்த தமிழ் மொழி படமும் முதலிடத்தை தொட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடியூன்ஸ் ஸ்டோரில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட்களுக்கு டிஜிட்டல் இசையை டவுன்லோட் செய்யலாம். உலகின் மிகப்பெரிய ஆன்லைன் மியூசிக் ஸ்டோர் இது. ஆயிரம் கோடிக்கு மேலான இசை டவுன்லோடு களை இந்த நிறுவனம் இதுவரை விற்பனை செய்திருக்கிறது. உலகின் மொத்த இசை விற்பனையில் இந்த ஆன்லைன் நிறுவனத்தின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச மொழிகளில் ஏறத்தாழ ஒன்றரை கோடி பாடல்களுக்கான ஆன்லைன் விற்பனை உரிமையை பெற்றிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் இசை ஆல்பம் வெளியான நிமிடத்தில் இருந்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்தப்படத்தில் அடுத்த நூற்றாண்டுக்கான இசையை உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் என விமர்சகர்கள் கொண்டாடுகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களும் இசைப் பிரியர்களும் முன்பதிவு செய்து எந்திரன் பாடல் சிடிக்களை வாங்கி வருகின்றனர். இன்டர்நெட் டவுன்லோட் மூலமாகவும் எந்திரன் பாடல்கள் சரித்திரம் படைப்பது தமிழுக்கே பெருமை என்று திரையுலகம் பாராட்டுகிறது.
Comments
Post a Comment