கலைஞர் நகரத்துக்காக நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பையனூரில் கட்டப்பட இருக்கும் திரைப்படத்துறையினரின் கலைஞர் நகரத்துக்காக, 'தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக நடந்த நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், துணை தலைவராக ராதாரவி, செயலாளராக வாகை சந்திரசேகர், பொருளாளராக கே.ஆர்.செல்வராஜ், இயக்குனர்களாக பூச்சி முருகன், எம்.என்.கே நடேசன், நளினி, பாத்திமா பாபு, சீதா, பெஞ்சமின், கானா உலகநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இக்கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்ட 7 ஏக்கர் நிலம் வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

Most Recent