இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் நடிக்கிறார் சிரஞ்சீவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் சிரஞ்சீவி என்று அவரது மகன் ராம் சரண் கூறினார். தெலுங்கு நடிகரும், பிரஜா ராஜ்ய கட்சி தலைவருமான சிரஞ்சீவியின் 55 வது பிறந்தநாளையொட்டி ஐதராபாத்தில் ரசிகர்களின் ரத்ததான முகாம் நடந்தது. இதில் சிரஞ்சீவி மகனும் நடிகருமான ராம் சரண் பேசியபோது, "நான் உள்பட என் தந்தையின் ரசிகர்கள் எல்லோரும் மீண்டும் அவர் எப்போது நடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த பிறந்த நாளுக்குள் அவர் மீண்டும் நடிப்பார். ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக மீண்டும் நடிக்க வரப்போவதாக அவர் விருப்பமும் தெரிவித்திருக்கிறார். அவரது 150வது படத்தை நானே தயாரிக்கிறேன்" என்றார்.

இதையடுத்து ரசிகர்கள் முன்னிலையில் ராம் சரண் கேக் வெட்டி தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடினார். முன்னதாக தனது வீட்டில் குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடினார் சிரஞ்சீவி. கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் கடந்த 2 வருடமாக உழைத்து வருகிறார் சிரஞ்சீவி. அடுத்த வருடத்துக்குள் பலம் வாய்ந்த கட்சியாக பிரஜா ராஜ்யம் மாறிவிடும். தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக மக்களை சந்திக்கும் பணியில் இப்போது ஈடுபட்டிருக்கிறார். மாநிலத்தில் இடைத்தேர்தல் வரும் சூழல் உள்ளது. ஒருவேளை அந்த நிலை மாறினால் கட்சி பணிக்கு சில காலம் ஓய்வு கொடுத்துவிட்டு சினிமாவில் நடிக்க வரலாம்" என்றார்.

Comments

Most Recent