ஆந்திர அரசியலில் தீவிரம் காட்டி வந்த நடிகை ரோஜா விரைவில் அ.தி.மு.க.வில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க.வில் நடிகை குஷ்வு இண...
ஆந்திர அரசியலில் தீவிரம் காட்டி வந்த நடிகை ரோஜா விரைவில் அ.தி.மு.க.வில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க.வில் நடிகை குஷ்வு இணைந்துள்ள நிலையில் அவருக்கு போட்டியாக நடிகை ரோஜா களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ரோஜா, தமிழ் மற்றும் தெலுங்கில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டைரக்டர் செல்வமணியை திருமணம் செய்து கொண்ட ரோஜா, திருமணத்துக்கு பின்னர் சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், ஆந்திர அரசியலில் அதிரடியாக குதித்தார். திரைப்படத் துறையில், அழகு ரோஜாவாக பூத்துக் குலுங்கிய ரோஜா, அரசியலில் குதித்தப் பின், எதிர்க்கட்சிகளுக்கு முள்ளாகவும், வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான ரோஜாவாகவும் பழகி வருகிறார்.
முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா, சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவரை தமிழக அரசியலுக்கு இழுத்து வர அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாகவும், அவர் விரைவில் அ.தி.மு.க.வில் இணையப்போவதாகவும் செய்திகள் கிளம்பியுள்ளன. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பு, தி.மு.க. இணைந்தார். அவருக்கு போட்டியாக நடிகை ரோஜா களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தேர்தலுக்கு தேர்தல் அரசியல் கட்சிகள் சினிமா நடிகர் - நடிகைகளை தங்களது கட்சிக்கு இழுத்து வந்து பிரசாரத்திற்கு பயன்படுத்துவது கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. தி.மு.க.வில் நெப்போலியன், ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்ட நடிகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதுடன் போட்டியிட்டு முக்கிய பொறுப்புகளையும் வகித்து வருகிறார்கள். அதேபோல அ.தி.மு.க.வில் ராமராஜன், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட நடிகர்களுடன் கடந்த தேர்தலில் சிம்ரன், விந்தியா போன்ற நடிகைகளையும் பிரசாரத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment