ராஜேஷின் ஆக்ஷன் கதை சூர்யாவுக்கு பொருத்தமாக இருக்கும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


'சிவா மனசுல சக்தி’ படத்தை அடுத்து ராஜேஷ் இயக்கியுள்ள படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்’. இரண்டுமே காதல் கலந்த காமெடி கதைகள். இது பற்றி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ பட ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் கூறும்போது, ‘ராஜேஷுக்குள் ஆக்ஷன் இயக்குனர் ஒளிந்திருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் கதையை ரெடியாக வைத்திருக்கிறார். அந்த கதையை யாரிடமாவது சொல்லப்போனால், 'உனக்கு எதுக்குப்பா ஆக்ஷன் கதை? காமெடி நல்லா வருதே. அதையே செய்’ என்றுதான் சொல்கிறார்கள். ராஜேஷின் ஆக்ஷன் கதை சூர்யாவுக்கு பொருத்தமாக இருக்கும். அதை அவர் கேட்க வேண்டும்’ என்று சூர்யாவிடம் சிபாரிசு செய்தார். உடனே ஒப்புக்கொண்ட சூர்யா, 'சீக்கிரமே உங்க ஆக்ஷன் கதையே கேட்கிறேன்’ என்று ராஜேஷிடம் கூறியுள்ளார்.

Comments

Most Recent