சென்னை பேட்மிண்டன்:நடிகை ஷாலினி தோல்வி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


சென்னை மாவட்ட பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லி-நிங் ஆதரவுடன் சென்னை அடையாறில் உள்ள காந்திநகர் கிளப்பில் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நடிகை ஷாலினி-ஏ.பிரியா ஜோடி சுனேரி-காந்தி விசாலட்சிமியை சந்தித்தது. இதில் முதல் செட்டை இழந்த ஷாலினி ஜோடி, 2-வது செட்டில் போராடி சரிவில் இருந்து மீண்டது. ஒரு கட்டத்தில் 20-18 என்ற முன்னிலை பெற்ற நிலையில் 20-20 என்று சமன் ஆனதால், விறுவிறுப்பு அதிகமானது. இதன் பின்னர் அந்த செட்டை ஷாலினி ஜோடி 22-20 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சுனேரி-காந்தி ஆகியோர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். எதிராளியின் ஷாட்களை சாதுர்யமாக திருப்ப முடியாமல் தடுமாறிய ஷாலினி இணை 3-வது செட்டை இழந்து தோல்வியை தழுவியது. முடிவில் சுனேரி-காந்தி ஜோடி 21-12, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

ஷாலினியின் ஆட்டத்தை பார்க்க அவரது கணவர் நடிகர் அஜீத் குமாரும் வந்திருந்தார். மனைவியின் ஆட்டத்தை வெகுவாக ரசித்த அவர், கைதட்டி உற்சாகப்படுத்தி கொண்டு இருந்தார். மீண்டும் பேட்மிண்டன் விளையாட தொடங்கி இருக்கும் ஷாலினி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பாரா? என்று நடிகர் அஜீத்திடம் கேட்ட போது, அவருக்கு எதில் சந்தோஷமோ அதனை தொடர்ந்து செய்வார் என்று பதில் அளித்தார்.

Comments

Most Recent