நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு!

 http://www.voicetamil.com/wp-content/uploads/2009/06/Nayanthara5.jpg
தமிழில் நயன்தாராவின் கடைசிப் படம் என்ற பெருமை அநேகமாக பாஸ் என்கிற பாஸ்கரனுக்குக் கிடைக்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வெளியில் நயன்தாராவைச் சுற்றி ஆயிரம் கதைகள் உலவினாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மத்தியில் தொழிலில் ரொம்ப சின்ஸியர் என்று பெயரெடுத்தவர் நயன்தாரா. தமிழைப் பொறுத்தவரை அவர் கடைசியாக ஒப்புக் கொண்ட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தையும் முடித்துவிட்டார். கைவசம் இருந்த விளம்பரப் படங்களின் படப்பிடிப்பும்கூட முடிந்துவிட்டன. மலையாளத்தில் அவர் நடிக்கும் எலக்ட்ரா படமும் முடியும் தறுவாயில் உள்ளது. அடுத்து? புதிய படங்கள் எதையுமே ஒப்புக் கொள்ளவில்லை நயன்தாரா. எனவே அவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, குடும்பம், குழந்தை என செட்டிலாகப் போகிறார் என்று மீடியா பரபரக்க ஆரம்பித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் கமலா திரையரங்கில் படம் பார்த்துவிட்டு ஹோட்டலில் தங்கினார். அப்போது அவரை ஒரு படத்துக்காக சந்திக்க தயாரிப்பாளரும் இயக்குநரும் முயன்றபோது, ஸாரி, நடிக்கும் ஐடியா இல்லை என்று கூறிவிட்டாராம்! அடுத்த ஒரு மாதம் முழுக்க பிரபு தேவாவுடன் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மால்ஷெஜ் மலைவாசஸ்தலத்தில் தங்கப் போகிறாராம்

Comments

Most Recent