சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு சினிமா நடிகருமான ராம் சரண் தேஜாவுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக வந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்க...
சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு சினிமா நடிகருமான ராம் சரண் தேஜாவுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக வந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ராம் சரண் தேஜா. மகதீரா படத்தின் ஹிட்டால் அங்கு இளம் முன்னணி ஹீரோக்களின் இடத்துக்கு முன்னேறியுள்ளார். சித்தப்பாவும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் அரசியலில் இருந்து விலகியே உள்ளார் ராம் சரண் தேஜா.மகதீரா படத்துக்கு பின் அப்படத்தின் ஹ¦ரோயின் காஜல் அகர்வாலுடன் இணைத்து க¤சுகிசுவில் சிக்கினார். இந்நிலையில் மும்பையிலிருந்து வரும் பத்திரிகை ஒன்று, ராம் சரண் தேஜாவுக்கு ரகசிய திருமணம் நடந்திருப்பதாகவும், ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவமனை நிறுவனர் ஒருவரின் மகள்தான் மணமகள் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிரஞ்சீவி ரச¤கர்களும் பிரஜா ராஜ்யம் கட்சி தொண்டர்களும் அவர் வீட¢டு முன்பு இன்று காலை முதலே கூடிவிட்டனர். இதையடுத்து ராம் சரணுக்கு ரகசிய திருமணம் எதுவும் நடக்கவில்லை என அவரது குடும்பத்தார் மறுத்துள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவருடன் ராமுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. அதேபோல இப்போதும் புரளி கிளப்பியுள்ளனர். இப்போதைக்கு அவருக்கு திருமணம் கிடையாது என சிரஞ்சீவியின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சிரஞ்சீவியின் மகள், சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரகச¤ய திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment