ஒரு நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப் பறிப்பது சினிமாவில் சகஜம். அதுவும் பாலிவுட்டில் இந்த வாய்ப்பு பறிக்கும் விளையாட்ட...
ஒரு நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப் பறிப்பது சினிமாவில் சகஜம். அதுவும் பாலிவுட்டில் இந்த வாய்ப்பு பறிக்கும் விளையாட்டு அடிக்கடி நடக்கும். ‘ஹுக் யா க்ரூக்’ என்ற இந்தி படத்தில் ஜான் ஆப்ரகாமுடன் ஜோடி சேர்ந்தார் ஜெனிலியா. அப்போதே இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்துவிட்டது. ஜெய்ப்பூரில் ஷூட்டிங் நடந்தபோது, ஓட்டலில் இருந்து ஒன்றாக, அதுவும் பைக்கில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிற அளவுக்கு இவர்கள் நட்பு வளர்ந்திருந்தது.
இதற்கிடையே இப்படம் பைனான்ஸ் பிரச்னையால் நின்றுவிட்டது. இருந்தாலும் ஜான், ஜெனிலியா நட்பு தொடர்கிறது. இப்போது ‘காக்க காக்க’ படத்தின் இந்தி ரீமேக்கை விபுல் ஷா தயாரிக்கிறார். நிஷிகாந்த் காமத் இயக்க உள்ளார். இதில் ஜானுக்கு ஜோடியாக அசின் ஒப்பந்தமானார். செப்டம்பர் இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அசின் திடீரென நீக்கப்பட்டு ஜெனிலியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கு காரணம், ஜான் ஆப்ரகாம் என்கிறது பட வட்டாரம்.
‘விபுல் ஷா இயக்கத்தில் ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படத்தில் அசின் நடித்தார். விபுல் ஷாவுடன் இருந்த நட்பால் ‘காக்க காக்க’ ரீமேக்கில் வாய்ப்பை கேட்டு பெற்றார் அசின். ஆனால் பட ஹீரோ ஜானிடம், ஜெனிலியா பேசியிருக்கிறார். இதனால் ஜெனிலியாதான் நடிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார் ஜான். அதையடுத்து இந்த மாற்றம் நடந்துள்ளது’ என பட டெக்னீஷியன் ஒருவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment