கவர்ச்சி எனக்கு பொருந்தாது -அனன்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நாடோடிகள் படத்தில் தனது துருதுரு நடிப்பால் அசத்திய அனன்யா, தான் நடித்து வரும் படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார் என செய்திகள் வெளியாகின. இதுபற்றி அவரிடம் கேட்ட போது தனக்கு கவர்ச்சி பொருந்தாது என அனன்யா கூறியுள்ளார். சொந்த மொழியான மலையாளத்தில் பிசியாக இருந்து வரும் அவர் தமிழில் சீடன் என்ற படத்தில் நடிக்கிறார். அவரிடம் யாராவது தெரியாத்தனமாக கவர்ச்சியா நடிப்பீங்களா மேடம் என்று கேட்டு விட்டால் போதும், பொறிந்து தள்ளி விடுகிறாராம். நான் எப்போதும் குடும்பப்பாங்கான பெண்ணாகத் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டார்.

Comments

Most Recent