போதை மருந்து விவகாரம் நடிகர் நடிகைகளுக்கு தடை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


போதை மருந்து விவகாரத்தில் பற்றிக்கொண்டு எரிகிறது தெலுங்கு திரையுலகம். ரவி தேஜாவின் சகோதரர்கள் போதை மருந்து வாங்கியபோது கைது செய்யப்பட்டனர். இதில் பல நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக ஐதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு அங்குள்ள நடிகர் சங்கம் ஆதாரம் கேட்கிறது. 'தெலுங்கு நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் மேம்போக்காக சொல்வதை போலீசார் தவிர்க்க வேண்டும். எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும்Õ என்று சங்கம் கேட்டிருக்கிறது. அதற்கு போலீஸ் தரப்பு, 'எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறது. விசாரணையில் அவை தெரிய வரும்Õ என்று பதிலடி கொடுத்திருக்கிறது.

இதற்கிடையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் நட்டி குமார் கூறும்போது, 'திடீரென்று இது போன்ற புகார்களில் நடிகர்கள் சிக்கிக்கொண்டால் அவர்கள் ஒப்புக்கொண்ட படம் பாதிக்கப்படும். எனவே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நடிகரோ, நடிகையோ யாராக இருந்தாலும் அவர்கள் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும்Õ என்றார். இதனால் டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

Most Recent