ஓணம் கொண்டாடிய கமல்-மீராஜாஸ்மின்!

http://thatstamil.oneindia.in/img/2010/08/23-meera-jasmin-200.jpg
ஓணம் பண்டிகையைக் கேரளாவில் கொண்டாடி மகிழ்ந்தனர் கமல்ஹாஸனும் மீரா ஜாஸ்மினும்.

கேரளாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான திருவோணத் திருவிழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகின்றன.

கமல்ஹாஸன், ஜெயராம், நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோர் போர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் இருவரும் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் கொண்டாடினார்கள். கமல்ஹாஸனும் அவர்களுடன் சேர்ந்து ஓணம் கொண்டாடினார்.

நடிகர் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, கணேஷ்குமார் ஆகியோரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னையில் மலையாள நடிகைகள் அதிகம். கோடம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில்தான் இவர்களில் பெரும்பாலோர் வசிக்கிறார்கள். பெரும்பாலான நடிகைகள் கேரளாவுக்குச் செல்லாமல் தங்கள் சென்னை வீட்டிலேயே குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஓணம் கொண்டாடினர்.

நடிகை சந்தியா சென்னை வீட்டில் பூக்கோலம் போட்டு ஓணம் கொண்டாடினார். மலையாள நடிகைகள் 'களவாணி' புகழ் ஓவியா, மைதிலி ஆகியோரும் சென்னையில் ஓணம் கொண்டாடினார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளுர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் இன்று காலையிலேயே ஏராளமான மக்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

குமரி மேற்கு மாவட்டத்தில் இன்று பல இடங்களிலும் திரைப்பட பின்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கும் இன்னிசை கச்சேரிகள் நடக்கின்றன. பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தமிழ் நடிகர் நடிகைகளே பங்கேற்கின்றனர்.

ஓணத்தையொட்டி, நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் இன்று மாலை கேரள மக்கள் பங்கேற்கும் கதகளி நிகழ்ச்சியும், இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன.

Comments

Most Recent