வில்லி நமீதா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக திகழும் நமீதா, இளைஞன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இளைஞன் தவிர தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நமீதா நடித்து வருகிறார். 6 அடி உயரமுள்ள நமீதா தற்போது கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் மூலம் எடையை கணிசமாக குறைத்து கண்ணுக்கு குளுமையாக மாறியுள்ளார். நமீதா வில்லியாக நடிக்கப் போகும் இளைஞன் படத்தில் மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். குஷ்பு, சுமன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இளைஞன் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனது வில்லி கதாபாத்திரம் குறித்து நமீதா கூறுகையில், நான் இளைஞன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது வெறும் நடிப்பு தான். நான் நிஜ வாழ்க்கையில் அப்படிபட்டவள் இல்லை. எனவே, இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னை வெறுத்துவிடக்கூடாது என்று தனக்கே உரிய கொஞ்சலான குரலில் கேட்டுக் கொண்டுள்ளார் நமீதா.

Comments

Most Recent