நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயராம் ஹீரோவாக நடிக்கும் படம், 'சபாஷ் சரியான போட்டி'. இதை டி.வி நடிகர் வேணுஅரவிந்த் இயக்குகிறார்.2003ம...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயராம் ஹீரோவாக நடிக்கும் படம், 'சபாஷ் சரியான போட்டி'. இதை டி.வி நடிகர் வேணுஅரவிந்த் இயக்குகிறார்.2003ம் ஆண்டு வெளியான 'ஜூலி கணபதி' படத்துக்குப் பிறகு, சரோஜா, தாம்தூம் உட்பட சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் ஜெயராம். இப்போது சபாஷ் சரியான போட்டி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக ஸ்ரீரஞ்சனி நடிக்கிறார். இந்த படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். 'பிரபலமான நடிகராக இருக்கும் ஹீரோவை உறவினர்கள் அரசியலில் குதிக்க சொல்கிறார்கள். கண்டிப்பாக முதல்வர் ஆகலாம் என்றும் உசுப்பேற்றுகிறார்கள். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை. காமெடிக்கு முக்கியத்துவம் தந்து படத்தை எடுத்திருக்கிறோம். படம் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது' என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
Comments
Post a Comment