நடிகை ரம்பா கர்ப்பம்! பிப்ரவரியில் குவா குவா!

http://4.bp.blogspot.com/_dN1Et-_8nYg/S73kifRTMHI/AAAAAAAAKSI/-qla9rPjffA/s1600/Rambha+Marriage+Photos+0.jpg
கனடா தொழில் அதிபரை மணந்த நடிகை ரம்பா இப்போது கர்ப்பமாக இருக்கிறார். உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் நடிகை ரம்பா. இவருக்கும் கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்திரகுமாரின் மேஜிக்உட் என்ற நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தமான ரம்பாவை, இந்திரகுமாருக்கு பிடித்து விட்டதால் பெற்றோரிடம் பேசி, ரம்பாவை திருமணம் செய்து கொண்டார். ஏப்ரல் 8ம்தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது, ஏப்ரல் 11ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமணத்தை முடித்த கையோடு ரம்பாவும், இந்திரகுமாரும் வெளிநாடுகளில் தேனிலவு கொண்டாடினர். பின்னர் இருவரும் சென்னை வந்து தங்கியிருந்தனர். ரம்பா தனது விடியும் வரை காத்திரு பட ரீலிசுக்கான வேலைகளில் பிஸியாக இருந்ததால், இந்திரகுமார் மட்டும் அடிக்கடி கனடா பறந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நடிகை ரம்பா கர்ப்பமாக இருக்கிறார். ரம்பா கர்ப்பம் குறித்த தகவல் அறிந்ததும் கனடாவில் இருந்து சென்னை வந்த கணவர் இந்திரகுமார், ரம்பாவை கனடாவுக்கு அழைத்து சென்று விட்டார். ரம்பாவுக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

Comments

Most Recent