மீண்டும் நடிக்க வருகிறார் பாரதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


'அம்முவாகிய நான்' உட்பட பல படங்களில் நடித்தவர் பாரதி. திடீரென்று திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், இப்போது மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:தமிழ், மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். கடைசியாக, 'ஆயுதம்' என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்தேன். 'அம்முவாகிய நான்' நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டதால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இப்போது ஒரு குழந்தைக்கும் தாயாகி எனது குடும்ப கடமைகளை முடித்து விட்டேன். அதனால் மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டேன். திருமணத்துக்குப் பிறகும் உடம்பை கவனமாக பார்த்துக் கொண்டதால் அப்படியேதான் இப்போதும் இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக நடிப்பது சிரமம் என்பது தெரியும். அதனால் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். முக்கியத்துவம் நிறைந்த கேரக்டர்கள் கொண்ட கதைகளை கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.

Comments

Most Recent