கிசு கிசு - கண்டிஷன் போடும் காமெடி ஹீரோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பன்னீரான இயக்குனர், அடுத்த படத்தை பல மாசம் முன்னாடியே ஆரம்பிச்சாரு. அந்த படத்துக்கு ஹீரோயின் கிடைக்காததால ஷூட்டிங் தடைபட்டுச்சு... தடைபட்டுச்சு... 100 பொண்ணுங்களுக்கு மேல பார்த்து கடைசியா ஒரு மாடலை தேர்வு பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்... அந்த புதுமுகத்துக்கு வசன உச்சரிப்பு தடுமாறுதாம். அதனால வசனம் சரியா பேச, ஷூட்டிங்லேயே கோச்சிங் கிளாஸ் நடத்துறாங்களாம்... நடத்துறாங்களாம்...

காமெடி கதைகள்ல நடிச்சு ப¤ரபலம் ஆனவரு தமிழ்மூவி ஹீரோ. இப்போ யாராவது காமெடி கதையோடு போனா, இந்த டைப் கதையில நடிக்க மாட்டேன்னு சொல்றாராம்... சொல்றாராம்... ஆக்ஷன், புரொடக்ஷன் வேல்யூ இருந்தா கதை சொல்லுங்கன்னும் கண்டிஷன் போடுறாராம்... போடுறாராம்...

பல இயக்குனர்கள்கிட்ட அடுத்தடுத்து கதை கேட்டிருக்கிறாராம் பஞ்ச் நடிகர். எல்லோர்கிட்டேயும் 'உங்க கதை சூப்பர்ணா'ன்னு சொல்லியிருக்கிறாராம்... சொல்லியிருக்கிறாராம்... ஆனா, படம் ஆரம்பிக்கிறது பத்தி எதுவும் சொல்லலியாம். இதனால நடிகரோட கால்ஷீட் எப்போ கிடைக்கும்னு அந்த இயக்குனருங்க காத்து கிடக்கிறாங்களாம்... காத்து கிடக்கிறாங்களாம்...

Comments

Post a Comment

Most Recent