லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அந்த படத்தை தானே இயக்குவதாக லிங்குசாமி...
லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அந்த படத்தை தானே இயக்குவதாக லிங்குசாமி அறிவித்தார். இப்போது, அந்த படத்தில் சிம்பு நடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி சிம்பு வெளியிட்ட அறிக்கை: செப்டம்பர் 1ம் தேதி முதல் என்னிடம் கால்ஷீட் இருப்பதையும் லிங்குசாமியிடம் தெரிவித்தேன். அப்படி இருந்தும் அவரது படத்தில் நான் இல்லை என்றும், இன்னொரு நடிகரை தேர்வு செய்வதாகவும் கூறியுள்ளார். இதற்கு நான் காரணம் என்பது போலவும் கூறியுள்ளார். இது முறையற்ற செயலாகும். இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.
சிம்புவுக்கும் இயக்குநர் லிங்குசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது அதில் விஜய் நடிக்க போகிறார். தற்போதைய நிலவரப்படி 5 படங்களில் நடிக்கிறார் விஜய். அவை: சித்திக் இயக்கத்தில் காவல் காதல், ராஜா இயக்கத்தில் வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் மற்றும் லிங்குசாமி படம். இப்படி பெரிய இயக்குனர்களை கொண்டு புதிய அவதாரத்துடன் தனது அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார் இளைய தளபதி.
Comments
Post a Comment