‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். தீபா மேத்தாவின் ‘ஃபயர்’ படத்தில் லெஸ்பியனாக நடித்து பரபரப்பை ஏற்படுத...
‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். தீபா மேத்தாவின் ‘ஃபயர்’ படத்தில் லெஸ்பியனாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தீபாவின் அடுத்த படமான ‘எர்த்’தில் படுக்கையறை காட்சியில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தீபா இயக்கும் ‘மிட்நைட் சில்ட்ரன்ஸ்Õ படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இதே பெயரில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது. அதனால் இதிலும் சர்ச்சைக்கு குறைவு இருக்காது என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியா&பாகிஸ்தான் பிரிவினையை பற்றிய படமாக இது உருவாகிறது. நந்திதா தாஸ் தவிர ஷபானா ஆஸ்மி, கங்கனா ரனவ்த், இர்பான் கான் நடிக்கின்றனர்.
Comments
Post a Comment