சினிமாவில் பல காதல் வலையில் விழுந்த மூணுஷா நிஜ வாழ்க்கையிலும் காதலில் விழுந்திருக்கிறார் என்கிற செய்திதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபர...
சினிமாவில் பல காதல் வலையில் விழுந்த மூணுஷா நிஜ வாழ்க்கையிலும் காதலில் விழுந்திருக்கிறார் என்கிற செய்திதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபர கிசுகிசு. அதுவும் முக்கோண காதல். தொடர் தோல்வி நாயகன் என்ற பெயருக்கு சொந்தக்காரரான அந்த நடிகர் மூணுஷாவுடன் ஒரேயொரு படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார். அப்போது அம்மணியுடன் ஏற்பட்ட காதல் இப்போது எக்கச்சக்கமாகி விட்டதாம். அதே நேரம் திருமணமாகி குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் ஹீரோவும் மூணுஷாவை லவ்வுகிறாராம். ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் லவ்வி வரும் மூணுஷா, யாரை கரம்பிடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார். மூணுஷாவின் தாய்க்குலமோ... திருமணம் ஆகாத அந்த பையன் ஓ.கே. என்று சொல்கிறாராம். ஆனால் அம்மணிக்கோ அந்த அனுபவஸ்த காதலனைத்தான் படித்திருக்கிறதாம். ம்... இன்னொரு நயன்தாராவா?
Comments
Post a Comment