'குளிர்' சஞ்சீவ், கீர்த்தி நடிக்கும் படம், 'சகாக்கள்'. இதை வி.வி.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. எல்.எம்.கே.சுவாமி இயக்குகிறா...
'குளிர்' சஞ்சீவ், கீர்த்தி நடிக்கும் படம், 'சகாக்கள்'. இதை வி.வி.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. எல்.எம்.கே.சுவாமி இயக்குகிறார். அவர் அளித்த பேட்டி: பழநி மலைக்கு பாத யாத்திரை செல்லும்போது பரபரப்பான சம்பவங்கள் நடக்கிறது. யாத்திரையில் இணைந்து செல்லும் இளம் காதலர்களின் பிரச்னைகளும் கதையின் முக்கிய அம்சம். இதில் இடம்பெறும் பாத யாத்திரை காட்சிக்காக, துணை நடிகர்களாக 5 ஆயிரம் பேரை தேர்வு செய்தோம். அவர்களை காரைக்குடியிலுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தோம். எல்லோருக்கும் மஞ்சள் ஆடை அளிக்கப்பட்டது. காட்சிப்படி அவர்கள் அலகு குத்தி, காவடி சுமந்து வெயிலில் பாத யாத்திரை செல்ல வேண்டும். இதற்காக ஒரு வாரம் அவர்கள் விரதம் இருந்து நடித்தனர்.
Comments
Post a Comment