சிக்குபுக்கு டிரைலர் ரிலீஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் மற்றும் மெஜஸ்டிக் மல்டி மீடியா லிமிடெட் தயாரிக்கும் படம், 'சிக்குபுக்கு'. ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.பி.குருதேவ். வசனம், எஸ்.ராமகிருஷ்ணன். வாலி, பா.விஜய் பாடல்கள். இசை, ஹரிஹரன்&லெஸ்லி. கூடுதல் இசை, பிரவீன் மணி. கே.மணிகண்டன் இயக்குகிறார்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. விழாவில் ஆர்யா, ஹரிஹரன்&லெஸ்லி, சுவி, சுஜித் சுரேஷன், பிரவீன் மணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெகன், கே.மணிகண்டன், திங்க் மியூஸிக் ஸ்வரூப் ரெட்டி கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சூரிய ராஜ்குமார் நன்றி கூறினார். சின்மயி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரசிகர்களின் வேண்டுகோளுக்காக ஹரிஹரன் சில பாடல்களை பாடினார்.

Comments

Most Recent