ரஜினியின் இளைய மகள் திருமணம் :திருமண அழைப்பிதழை முதல்வரிடம் கொடுத்தார் ரஜினிகாந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சவுந்தர்யா ரஜினிகாந்த்-அஸ்வின் திருமணம் செப்டம்பர் மாதம் 3ம் தேதி சென்னையில் நடக்கிறது. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. இவர் தனது ஆக்கர் ஸ்டூடியோ மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். இவரும் தொழிலதிபர் மகன் அஸ்வினும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு வாழ்த்தினார்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார். தனது மகள் சவுந்தர்யாவின் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த் முதல்வரிடம் கொடுத்தார். ரஜினிகாந்த்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் 3ம் தேதி சென்னையிலுள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற உள்ளது.

Comments

Most Recent