'மலர் மேல்நிலைப்பள்ளியில் அறிமுகமாகிறார் ஹாசிகா. ஷூட்டிங்கில் காயம் அடைந்தவர், ஒரு மாதம் ஓய்வில் இருந்தாராம். இது பற்றி ஹாசிகா கூறும்ப...
'மலர் மேல்நிலைப்பள்ளியில் அறிமுகமாகிறார் ஹாசிகா. ஷூட்டிங்கில் காயம் அடைந்தவர், ஒரு மாதம் ஓய்வில் இருந்தாராம். இது பற்றி ஹாசிகா கூறும்போது, கிளை மாக்ஸ் காட்சியில் கரடு முரடான பாதையில் ரவுடிகள் என்னை துரத்துவார்கள். அப்போது கீழே விழுந்தேன். கால், இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. அதற்காக ஒரு மாதம் சிகிச்சை பெற்றேன். அதன் பின்பே ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். கதைப்படி யாரையும் காதலிக்க கூடாது என்பதற்காக சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டி அதில் என்னை அப்பா படிக்க வைப்பார். அதையும் மீறி சக மாணவர் ஒருவருடன் காதல் மலர்கிறது. இந்த சினிமா காதலைப் போல், ஒரு சம்பவம் 7ஆம் வகுப்பு படிக்கும்போதே நிஜத்தில் எனக்கு ஏற்பட்டது. என்னுடன் படிக்கும் மாணவர் திடீரென்று ஒரு லெட்டர் கொடுத்தார். அதில் ஐ லவ் யூ என்று எழுதி இருந்தது. அந்த லெட்டரை அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டேன் என்றார்.
Comments
Post a Comment