அமிதாப் என் குரு...ரோல் மாடல்! - ரஜினி

http://thatstamil.oneindia.in/img/2010/08/15-rajini-amitab200.jpg

அமிதாப் பச்சன்தான் திரையுலகில் எனக்கு தூண்டுதல், ரோல்மாடல், குரு…, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மும்பையில் நடந்த ரோபோ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாவது:
நானும் அமிதாப்பும் அந்தா கானூன், கிராப்தார், ஹம் என பல படங்களில் இணைந்து செய்துள்ளோம். அப்போதல்லாம் என் து அவர் காட்டிய அன்பு, நட்பு மறக்க முடியாதது.
முக்கிய முடிவு எடுக்கும் முன் நான் அமிதாப்பின் யோசனையைக் கேட்பது வழக்கம். அந்த அளவு என் வாழ்க்கையில் முக்கியமானவர் அமிதாப்.
ரோபோவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நான் ஷங்கருடன் சிவாஜி படம் பண்ணியிருந்தாலும், இந்தப் படத்தில் சவாலான வேடம்.
இந்தப் படத்தில் கமல்ஹாஸன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன நடந்ததோ… கடைசியில் நான் நடித்தேன். நான்தான் நடிக்க வேண்டும் என்பது கடவுளின் தீர்மானம் போலிருக்கிறது. அதை மாற்ற யாரால் முடியும்.
இந்தப் படத்தில் பட்ஜெட் ரூ 160 கோடிக்கும் மேல். தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக வந்துள்ளது இந்தப் படம். ஆனால் இது மட்டுமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகிவிடாது.
35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஷோலே. வசூலில் சரித்திரம் படைத்த படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பட்ஜெட்டோ, பெரிய நடிகர்கள் நடித்ததோ மட்டும் காரணமல்ல. படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான நடிப்பு, அந்த பாத்திரங்கள், மனித நேயத்தை உணர்த்தும் காட்சிகள் போன்றவைதான்.
அதேபோலத்தான் ரோபோவிலும் சிறந்த கதை மற்றும் பாத்திரப் படைப்புகள் அமைந்துள்ளன. அதற்கு உறுதுணையாக படத்தின் மெகா பட்ஜெட் அமைந்துள்ளது. இந்தப் படம் உருவாகியுள்ள விதம், இதன் இறுதி வடிவம் எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் முதல் விஞ்ஞானப் படம் ரோபோ என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார் ரஜினி.

Comments

Most Recent