நான் சிகரெட்கூட குடிப்பதில்லை:காம்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போதை மருந்து விவகாரத்தில் பல நடிகைகளின் பெயர்கள் அடிபடுகிறது. போலீசாரின் விசாரணைக்கான பட்டியலில் காம்னா, மதுஷாலினியின் பெயரும் இருப்பதாக டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி கம்னா கூறும்போது, 'போதை மருந்தை விடுங்கள், நான் சிகரெட் கூட பிடிப்பதில்லை. ஆன்மீக ஈடுபாட்டுடன் வாழ்ந்து வருகிறேன். திரைக்கு வந்து சில காலம்தான் ஆகிறது. இச்சூழலில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த விசாரணைக்கும் நான் தயார். கடந்த 6 மாதங்களில் யார், யாரிடம்

பேசினேன் என்ற போன்விவரத்தையும் போலீசார் சோதனை செய்துகொள்ளலாம் என்கிறார்.'பார்ட்டிக்கு செல்வதால் போதை பொருள் பயன்படுத்துகிறேன் என அர்த்தமில்லை. தேர்ந்தெடுத்து, ஒழுக்கமாக நடக்கும் பார்ட்டிகளுக்குதான் செல்கிறேன். அது தவறா? விசாரணை என வரும்போது உண்மை தெரியும். இந்த விவகாரத்தால் எனது அப்பா, அம்மா
வேதனையடைந்துள்ளனர். அதுதான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்கிறார் மதுஷாலினி.

Comments

Most Recent