வானம் பட ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் நடிகர் பரத்தின் கை கிழிந்தது.சிம்பு, பரத், சினேகா உல்லால் நடிக்கும் படம் ...
வானம் பட ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் நடிகர் பரத்தின் கை கிழிந்தது.சிம்பு, பரத், சினேகா உல்லால் நடிக்கும் படம் "வானம்". இப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்கிறது. கிரிஷ் இயக்குகிறார். காட்சிப்படி எதிரே வரும் வில்லனின் ஜீப் மீது ஓடி வந்து பரத் விழ வேண்டும். இந்த காட்சிக்கு டூப் போட்டு எடுக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். கடைசி நேரத்தில் டூப் இல்லாமல் நானே நடிக்கிறேன் என பரத் சொன்னாராம். இதையடுத்து காட்சியை படமாக்கினர். ஓடி வந்து ஜீப் மீது பரத் விழுந்தபோது, ஜீப்பின் முன்புற கண்ணாடி உடைந்தது. அது பரத்தின் கையை கிழித்ததில் ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த படக்குழுவினர் பதறினர். உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரது கையில் தையல்கள் போடப்பட்டன. இதுபற்றி பரத் கூறும்போது, "ஆக்ஷன் காட்சியில் டூப் இல்லாமல் நடிக்க விரும்பினேன். அது இப்படியாகிவிட்டது. படப்பிடிப்புக்கு லீவு போட்டுவிட்டு சென்னை வந்துவிட்டேன். 4 நாள் வீட்டில் ஓய்வெடுக்கப் போகிறேன்" என்றார்.
Comments
Post a Comment