சந்திரமுகி பார்ட் 2வில் அஜீத்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடித்து சக்கை போடு போட்ட 'ஆப்தமித்ரா’வை தமிழில் 'சந்திரமுகி’யாக இயக்கினார் பி.வாசு. இதையடுத்து '’சந்திரமுகி பார்ட் 2′ எடுப்பேன்’ என்று வாசு கூறி வந்தார். இந்நிலையில் கன்னடத்தில் 'ஆப்தமித்ரா’ படத்தின் இரண்டாம் பாகமாக 'ஆப்தரக்ஷகா’ படத்தை எடுத்தார். விஷ்ணுவர்தன் நடித்த இப்படம், அவர் மறைவுக்கு பின் திரைக்கு வந்து ஹிட்டானது. இதை தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் இயக்கி வருகிறார் வாசு.
இந்நிலையில் 'சந்திரமுகிÕ பாகம் 2வை தமிழில் இயக்குவதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் வாசு. இதில் நடிக்க அஜீத்திடம் அவர் பேசியுள்ளார். இதையொட்டி ‘ஆப்தரக்ஷகா’ படத்தை பார்க்க வரும்படி அஜீத்துக்கு வாசு அழைப்பு விடுத்தார். சமீபத்தில் இப்படத்தை பார்த்தார் அஜீத். படம் அவரை கவர்ந்துவிட்டதாம். ‘மற்ற பேச்சுகள் நடக்கிறது. சீக்கிரமே இது குறித்து முடிவாகும்’ என்கிறது வாசு தரப்பு.

Comments

Most Recent