தெலுங்கு படங்கள் என்றால் மட்டுமே முன்னுரிமை தருகிறார் இலியானா. வேறு எந்த மொழி வாய்ப்பாக இருந்தாலும் ஒதுங்கிக் கொள்கிறார். ஆனால் இப்போது கன...
தெலுங்கு படங்கள் என்றால் மட்டுமே முன்னுரிமை தருகிறார் இலியானா. வேறு எந்த மொழி வாய்ப்பாக இருந்தாலும் ஒதுங்கிக் கொள்கிறார். ஆனால் இப்போது கன்னடத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக அல்ல. ஒரு பாட்டுக்கு மட்டும். அதற்காக அவருக்கு தரப்பட்டுள்ள சம்பளம் ரூ. 30 லட்சமாம். ஒரே ஒரு நாள் மட்டுமே இதற்காக கால்ஷீட் ஒதுக்கினாராம் இலியானா. அந்த ஒரு நாளில் கோவாவில் இப்பாடல் காட்சியை படமாக்கி முடித்துள்ளனர். படத்தின் பெயர் ‘ஹுடுகா ஹுடுகி’. ‘குட்டி’ படத்தில் வில்லனாக நடித்த சமீர் தத்தானி இதில் ஹீரோ. இந்திரஜித் இயக்குகிறார். சந்தேஷ் நாகராஜ் தயாரிக்கிறார்.
கன்னடத்தில் ஹீரோயின்களுக்கே ரூ. 30 லட்சம் சம்பளம் தருவதில்லை. ஒரு பாட்டுக்காக இலியானாவுக்கு இவ்வளவு சம்பளம் தந்த¤ருப்பது அங்குள்ள நடிகைகளுக்கு புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறதாம். இது பற்றி பட தயாரிப்பாளர் சந்தேஷ் நாகராஜ் கூறும்போது, ‘இப்படத்தை இந்தியிலும் வெளியிட உள்ளேன். அதனால்தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கிறேன். கோவாவில் ஷூட்டிங் எடுத்தபோது, இலியானா தங்கிய ஓட்டல் அறைக்கு ஒரு நாள் வாடகை மட்டும் ரூ. 28 ஆயிரம். மற்றபடி அவர் சம்பளம் ரூ. 30 லட்சமா என்பது பற்றி சொல்ல முடியாது’ என்றார்.
Comments
Post a Comment