69க்கு குறைந்தார் சரண்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

3 மாதத்துக்கு முன்பு 89 கிலோ உடல் எடையிருந்தார் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.சரண். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்தபோது ஆளே மாறியிருந்தார். 20 கிலோ குறைந்து ஸ்லிம் சரணாக தோன்றினார். இது பற்றி அவர் கூறியதாவது: எடை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் 89 கிலோ இருந்த எனது எடையை டயட் மூலமாக 20 கிலோ குறைத்திருக்கிறேன். வெறும் ஜூஸ் மட்டும்தான் குடிக்கிறேன். அரிசி சாப்பிடுவது கிடையாது. ஹீரோவாக நடிக்க யாராவது கூப்பிட்டால் நிச்சயம் நடிப்பேன். கடைசியாக 'வÕ படத்தில் 2வது ஹீரோவாக நடித்தேன். அதில்கூட அதே குண்டு உடம்புதான். இப்போதுதான் இப்படி மாறினேன். தற்போது தயாரித்து வரும் 'ஆரண்ய காண்டம்Õ ஷூட்டிங் முடிந்து ரீரெக்கார்டிங் நடந்து வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. பட விழாவில் திரையிட்ட பிறகு இங்கு ரிலீசாகும். இவ்வாறு சரண் கூறினார். 

Source: Dinakaran

Comments

Most Recent