இதுவரை இல்லாத சாதனையாக, 8 மாதங்களில் 100 படங்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டுகளை...
இதுவரை இல்லாத சாதனையாக, 8 மாதங்களில் 100 படங்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்திலிருந்தே அதிகமாக இருந்தது. ஆகஸ்ட் மாதம் வரை 100 படங்கள் வெளியாகி உள்ளது. இதில் நேரடி தமிழ் படங்கள் 80. மொழிமாற்றுப் படங்கள் 31. அதிகபட்சமாக ஜூலை மாதம் 18 படங்களும், ஜனவரி மாதம் 16 படங்களும் வெளிவந்துள்ளது. மற்ற மாதங்களில் சராசரியாக 8 முதல் 13 படங்கள் வரை வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மொழிமாற்று படங்கள் குறைந்த அளவே வெளியாகியுள்ளது. ஆங்கில படங்களை விட, தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவந்துள்ளது. இந்த மாதம் முதல் வாரத்திலேயே பத்துக்கும் மேற்பட்ட படம் வெளிவர இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் நேரடி தமிழ் படங்களின் எண்ணிக்கை 150 ஐயும் மொழிமாற்றுப் படங்களின் எண்ணிக்கை அறுபதையும் தொடும் என்கிறார் முன்னணி விநியோகஸ்தர் ஒருவர்.
Comments
Post a Comment