Arulnidhi`s gift to Sunaina | சுனேனாவுக்கு வைர டாலர் கொடுத்த அருள்நிதி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPc65nB_afjjsvFJuBmOBBlw8uRiziKjvtC5sGLTNL2rUX8TNh1CLU1wBKytO5DZ26Tjaud25neyTIYUgFxOYfDOjoTM3uXaxR9GPypp3gyjn5mG0YiFsphCwUniw6achrAyvE28GphOsv/s640/Vamsam+Songs+Download.jpg
முதல்வர் கருணாநிதியின் பேரனும், வம்சம் பட நாயகனுமான நடிகர் அருள்நிதி, வம்சத்தின் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சுனேனாவுக்கு வைர டாலர் பரிசாக அளித்து அசத்தியிருக்கிறார்.  வம்சம் படப்பிடிப்பின்போது தனது பெருமளவில் உதவியாக இருந்தமைக்காக அவர் இந்த அன்பு பரிசை வழங்கினாராம். முதல்வர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகன்தான் நடிகர் அருள்நிதி. தந்தையின் தயாரிப்பில், பசங்க டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான வம்சம் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.  சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் சினிமாவுக்கு புதிது என்பதால் அருள்நிதி ப‌டபடப்புடன் காணப்பட்டாராம். அப்போது ஏற்கனவே நடிப்பில் அனுபவம் மிக்க நடிகை சுனேனாதான் பல விஷயங்களை கற்றுக் கொடுத்து உதவிகரமாக இருந்திருக்கிறார். குறிப்பாக பாடல்களுக்கு டான்ஸ் ஆடும் விஷயத்திலும், மேக்கப் விஷயங்களிலும் நிறை டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

சுனேனாவின் இந்த உதவியால் நெகிழ்ந்து போயிருந்த அருள்நிதி, சுனேனாவுக்கு வைரம் பதித்த டாலர் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தி விட்டாராம். சுனேனாவுக்கு பேரன் வைர டாலர் கொடுக்க... தாத்தா கருணாநிதியோ... பேரனுக்கு தங்க கடிகாரம் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறாராம்.

Comments

Most Recent