ரசிகர்களை மிரட்ட படம் எடுக்காதீர்கள் :அறிமுக இயக்குனர்களுக்கு மிஷ்கின் அட்வைஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


ரசிகர்களை மிரட்ட படம் எடுக்காதீர்கள் என்று அறிமுக இயக்குனர்களுக்கு மிஷ்கின் அறிவுரை கூறினார். தம்பிக்கோட்டை ராஜேஸ்வரி பிலிம்ஸ் சார்பில் ஆர்.கே.ரமேஷ் தயாரிக்கும் படம் 'தம்பிக்கோட்டை'. நரேன், பூனம் பஜ்வா, மீனா, பிரபு, சங்கீதா நடிக்கிறார்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. ஆர்யா வெளியிட, ஜெயம்ரவி பெற்றுக் கொண்டார். விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது:

முதல் படம் இயக்குபவர்கள் சேது, சுப்பிரமணியபுரம் போன்று வெற்றிப் படங்களை கொடுக்க வேண்டும். நான்கு பாட்டு, நான்கு பைட் என்று வழக்கமான கமர்சியல் படம் இயக்கக் கூடாது. பிறகு காணாமல் போய்விடுவீர்கள், பாரதிராஜா, மணிரத்னம், பாலுமகேந்திராவை விட நல்ல படங்கள் கொடுக்க வெறியோடு உழைக்க வேண்டும். ரசிகர்களை மிரட்டுகிற மாதிரி படங்களை எடுக்கக்கூடாது. ரசிகர்களுக்கும், நமக்கும் அதிக தூரம் இல்லை. நாம் ரசிக்கிற படங்களைத்தான் அவர்களும் ரசிக்கிறார்கள். நல்ல படம் எடுத்தால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விடுவார்கள். சினிமாவில் இருக்கும் குப்பைகளை அகற்ற இளம் இயக்குனர்கள் நல்ல படங்களைத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, ஆர்யா, ஜெயம்ரவி, பிரசன்னா, நரேன், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், இயக்குனர்கள் ஜெயம்ராஜா, சற்குணம், ஒளிப்பதிவாளர் கண்ணன், இசை அமைப்பளர் இமான், பாடலாசிரியர் விவேகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வரவேற்றார். முடிவில் இயக்குனர் ஆர்.அம்மு ரமேஷ் நன்றி கூறினார்.

Comments

Most Recent